யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஒருநாள் தரவரிசையில் தோனி முதலிடம்
துபாய் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 30 டிசம்பர் 2008   ( 12:46 IST )
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்ட ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 779 புள்ளிகளுடன் கேப்டன் தோனி தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸி உள்ளார். இந்திய வீரர் யுவராஜ் சிங்கிற்கு, இப்பட்டியலில் 6-வது இடம் (744 புள்ளிகள்) கிடைத்துள்ளது. சச்சின் டெண்டுல்கருக்கு 12-வது இடம் கிடைத்துள்ளது.

பந்து வீச்சாளர்களில் ஜாகிர்கான் 660 புள்ளிகளைப் பெற்று 11-வது இடத்திலும், ஹர்பஜன்சிங் 617 புள்ளிகளுடன் 20-வது இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் அணிக்கான தரவரிசைப் பட்டியலில் 119 புள்ளிகளுடன் இந்திய அணி 3-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், தென் ஆப்ரிக்கா 2-வது இடத்திலும் உள்ளன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா
2-வது டெஸ்ட்: தென் ஆப்ரிக்காவுக்கு வெற்றி வாய்ப்பு
2008-ல் சிறந்த அணியாக இந்தியா தேர்வு
டுமினி சதம்: தென்ஆப்ரிக்கா-459
இலங்கை கிரிக்கெட் அணி பாக். செல்கிறது
பஞ்சாப் ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய முதல்வராக தனது மகன் உமர் அப்துல்லாவை தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பரிந்துரை செய்துள்ளார்....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சிலம்பாட்டம்
ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது....
பொம்மலாட்டம்
பூ - விமர்சனம்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - இன்றைய நம் வாழ்க்கையில் ஏசி எனப்படும் குளிர்சாதனப் பெட்டி அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் முறையாகப் பயன்படுத்தாத ஏசி-க்களால் உடல்...
மேலும் படிக்க|மேலும்...