|
| ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா |
| மெல்போர்ன் (ஏஜென்சி), 30 டிசம்பர் 2008 ( 12:29 IST ) | |
மெல்போர்ன் கிரிக்கெட் டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 16 ஆண்டுகளுக்குப் பின் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா தொடரை இழந்தது.
வெற்றி பெற 153 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், 5 ஆம் நாளான இன்று காலை தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா, 48 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
தொடக்க வீரர் கேப்டன் ஸ்மித் 75 ரன்கள் எடுத்து வெளியேறினார்.மெக்கென்சி 59 ரன்களுடனும், ஆம்லா 30 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2- 0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக ஸ்டெயின் அறிவிக்கப்பட்டார்.
தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஆஸ்திரேலிய அணி, 16 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தற்போது தொடரை இழந்துள்ளது. அடுத்த போட்டியிலும் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்றால், தரவரிசையில் அது முதலிடத்திற்கு முன்னேறும்.
சுருக்கமான ஸ்கோர்:
ஆஸ்திரேலியா- முதல் இன்னிங்ஸ்: 394/10, 2-வது இன்னிங்ஸ்: 247, தென் ஆப்ரிக்கா- முதல் இன்னிங்ஸ்: 459/10, 2-வது இன்னிங்ஸ்: 183/1.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய முதல்வராக தனது மகன் உமர் அப்துல்லாவை தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பரிந்துரை செய்துள்ளார்.... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - இன்றைய நம் வாழ்க்கையில் ஏசி எனப்படும் குளிர்சாதனப் பெட்டி அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் முறையாகப் பயன்படுத்தாத ஏசி-க்களால் உடல்... |
| |
|
|
|
|
|
|
|