யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார் யுவராஜ்
புதுடெல்லி/ சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2008   ( 16:46 IST )
இங்கிலாந்து எதிரான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்டது போலவே யுவராஜ் சிங் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில், எதிர் வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணி குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன் பின்னர் 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ தேர்வுக் குழு இன்று அறிவித்தது.

நீண்ட போராட்டத்துக்குப் பின்னர், 'ஒருநாள் அதிரடி மன்னன்' யுவராஜ் சிங், டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ளார். இதேபோல் தமிழக வீரர்கள் எம். விஜய், எஸ்.பத்ரிநாத் ஆகியோருக்கும் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அணி விவரம் வருமாறு: மகேந்திரசிங் தோனி (கேப்டன்), வீரேந்திர சேவாக், கவுதம் காம்பீர், ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ். லட்சுமண், யுவராஜ் சிங், அமீத் மிஸ்ரா, ஜாகிர்கான், இஷாந்த் சர்மா, ஹர்பஜன் சிங், பத்ரிநாத், முனாப் படேல், முரளி விஜய் மற்றும் பிரக்யன் ஓஜா.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அபுதாபியில் இங்கிலாந்து அணி பயிற்சி
இங்கி. டெஸ்ட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய ஹாக்கி அணி அர்ஜென்டீனா பயணம்
ஒருநாள் தரவரிசை: தோனி தொடர்ந்து முதலிடம்
டெஸ்ட் போட்டி: இங்கி. அதிகாரி சென்னையில் ஆய்வு
கால்பந்து: ரொனால்டோவுக்கு தங்கப்பந்து விருது
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...