யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ஒருநாள் தரவரிசை: தோனி தொடர்ந்து முதலிடம்
துபாய் (ஏஜென்சி), புதன்கிழமை, 3 டிசம்பர் 2008   ( 13:20 IST )
ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில், 779 புள்ளிகளுடன் தோனி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் யுவராஜ் சிங் 744 புள்ளிகள் பெற்று, இப்பட்டியலில் 6-வது இடத்தை பெற்றுள்ளார். சச்சின் 12-வது இடத்தில் உள்ளார்.

இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹசியும், 3-வது இடத்தில் தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் கிரேம் ஸ்மித்தும் உள்ளனர்.

பந்து வீச்சாளர்களைப் பொருத்தமட்டில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள் எவரும் இடம் பெறவில்லை. ஜாகீர்கான் 11-வது இடத்திலும், ஹர்பஜன்சிங் 20-வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சாளர்களில் ஆஸ்திரேலியாவின் பிராக்கெனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. 2-வது இடத்தில் நியூசிலாந்தின் வெட்டோரியும், 3-வது இடத்தில் இலங்கை வீரர் முரளிதரனும் உள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டெஸ்ட் போட்டி: இங்கி. அதிகாரி சென்னையில் ஆய்வு
கால்பந்து: ரொனால்டோவுக்கு தங்கப்பந்து விருது
சென்னை ஸ்குவாஷ் போட்டி: ஆஸி. விலகல்
டெஸ்ட் தரவரிசை: 3-வது இடத்தில் இந்தியா
5 ஆம் தேதி இங்கிலாந்து அணி இந்தியா வருகை?
பி.டி.ஏ. துணைத் தலைவராக பயஸ் தேர்வு
செய்திகள்
தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...