|
| டெஸ்ட் போட்டி: இங்கி. அதிகாரி சென்னையில் ஆய்வு |
| சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 3 டிசம்பர் 2008 ( 13:00 IST ) | |
இங்கிலாந்து அணிக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அந்த அணியின் பாதுகாப்பு அதிகாரி ரெக் டிகசன் இன்று சென்னையில் ஆய்வு மேற்கொண்டார்.
இதற்காக இன்று காலை 8.10 மணியளவில் தனியார் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்த டிகசனை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர், பி.சி.சி.ஐ. அதிகாரிகளுடன் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தை பார்வையிட்ட ரெக் டிகசன், அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கேட்டறிந்தார்.
தனது சென்னை பயணத்தை உடனடியாக முடித்துக் கொண்டு, இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெறும் மொகாலிக்கு அவர் இன்றே செல்வார் என்று தெரிகிறது.
மொகாலியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமையை அவர் ஆராய்ந்து பின்னர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தான் இங்கிலாந்து அணி இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது உறுதியாகத் தெரிய வரும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|