|
| கால்பந்து: ரொனால்டோவுக்கு தங்கப்பந்து விருது |
| பாரீஸ் (ஏஜென்சி), 2 டிசம்பர் 2008 ( 15:05 IST ) | |
இந்த ஆண்டின் சிறந்த ஐரோப்பிய கால்பந்து வீரருக்கான தங்கப் பந்து விருது, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கிடைத்துள்ளது.
பிரான்ஸ் கால்பந்து விளையாட்டு இதழ் நடத்திய வாக்கெடுப்பின் முடிவில், 446 புள்ளிகள் பெற்று ரொனால்டோ இப்பரிசை தட்டிச் சென்றார்.
இதில், பார்சிலோனா வீரர் லியோனல் மெஸ்ஸி (281 புள்ளிகள்) இரண்டாம் இடத்தையும், லிவர்பூல் வீரர் டோரஸ் (179 புள்ளிகள்) மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்கு விளையாடும் வீரர்களில் 4-வது நபராக ரொனால்டோ தங்கப் பந்து விருதை பெற்றுள்ளார்.
ஏற்கனவே இவர் தொடர்ந்து இரண்டு முறை பிரிட்டனின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கருத்து தெரிவித்த ரொனால்டோ, 'இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். விருதை பெற்றிருப்பதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது' என்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கித் தவித்த மும்பை நகரில் 4 நாட்களுக்குப் பின் இன்று இயல்பு நிலை திரும்பியது.வர்த்தக நிறுவனங்களும், பள்ளி- கல்லூரிகளும் வழக்கம் போல் செயல்பட்டன. |
| |
|
|
|
|
 | | | தெனாவட்டு | | தனியாளாக ரவுடி சாம்ராஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெரிந்தும் அவனுக்கு... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி... |
| |
|
|
|
|
|
|
|