யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
5 ஆம் தேதி இங்கிலாந்து அணி இந்தியா வருகை?
லண்டன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 1 டிசம்பர் 2008   ( 16:27 IST )
டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி வரும் 5 ஆம் தேதி இந்தியாவுக்கு வரவிருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

கெவின் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 7 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டு இருந்தது.

இதன்படி 5 ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்தன. இதில் 5- 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்று தொடரை வென்றது.

இதற்கிடையே கடந்த 26 ஆம் தேதி மும்பை நகரில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இது, இங்கிலாந்து வீரர்களை மனதளவில் கடுமையாக பாதிக்கச் செய்தது. ஒருநாள் தொடரை ரத்து செய்துவிட்டு உடனடியாக அவர்கள் தாயகம் திரும்பினர்.

மேலும், இந்தியாவில் பாதுகாப்பு அம்சங்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய அறிவித்திருந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து அணி மீண்டும் இந்தியா வருவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக, இங்கிலாந்து பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை அன்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவுக்கு மீண்டும் திரும்புவார்கள் என்று அந்த பத்திரிக்கை கூறியுள்ளது.

இதற்கிடையே பாதுகாப்பு கருதி 11 ஆம் தேதி அகமதாபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள முதல் டெஸ்ட் போட்டி, கொல்கட்டாவுக்கு மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

வரும் 19 ஆம் தேதி சென்னையில் 2-வது டெஸ்ட் போட்டி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது, முதலில் மும்பையில் நடப்பதாக இருந்தது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பி.டி.ஏ. துணைத் தலைவராக பயஸ் தேர்வு
இந்திய அணியின் பாக். பயணம் ரத்து
டெஸ்டில் பங்கேற்குமா? திங்களன்று இங்கிலாந்து முடிவு
சென்னை ஓபன் டென்னிஸில் சோம்தேவ் பங்கேற்பு
பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் வேண்டும்: பீட்டர்சன்
இங்கிலாந்து அணி டெஸ்டில் பங்கேற்கும்!
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தெனாவட்டு
தனியாளாக ரவுடி சாம்ரா‌ஜ்யத்தை அழிக்கும் ஹீரோ, பப்ளிக்கில் பன்ச் டயலாக் பேசி கொலை செய்யும் வில்லன், தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவன் யார் என தெ‌ரிந்தும் அவனுக்கு...
சேவல்
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - இன்றைய நவீன யுகத்தில் கருச்சிதைவு என்பது ரொம்பவே சர்வ சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அதனால், இதற்கான சிகிச்சைகள், வலி நீக்கி...
மேலும் படிக்க|மேலும்...