யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
டெஸ்டில் பங்கேற்குமா? திங்களன்று இங்கிலாந்து முடிவு
லண்டன் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2008   ( 14:46 IST )
இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திங்கட்கிழமை அன்று தனது முடிவை அறிவிக்கிறது.

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, கெவின் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி தனது இந்தியப் பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியது.

இரண்டு ஒருநாள் போட்டிகளில் அந்த அணி பங்கேற்காத போதும், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது குறித்து தாயகம் திரும்பியதும் ஆலோசித்து முடிவெடுப்பதாக அது உறுதியளித்திருந்தது.

இந்நிலையில் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திங்களன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறது. அப்போது, இந்தியாவின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அளிக்கப்படும் விரிவான அறிக்கையை வாரியம் ஆராயும்.

அதன் அடிப்படையில், இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்யும்.

இந்திய- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே வரும் 11 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி அகமதாப்பாத்திலும், 2வது டெஸ்ட் போட்டி 19 ஆம் தேதி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னை ஓபன் டென்னிஸில் சோம்தேவ் பங்கேற்பு
பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் வேண்டும்: பீட்டர்சன்
இங்கிலாந்து அணி டெஸ்டில் பங்கேற்கும்!
தாயகம் திரும்புகிறது இங்கிலாந்து கிரிக்கெட்
கட்டாக் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி
5வது ஒருநாள்: இந்தியா 51
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...