யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் வேண்டும்: பீட்டர்சன்
புவனேஸ்வர் (ஏஜென்சி), 29 நவம்பர் 2008   ( 17:30 IST )
எங்களது பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளித்தால் மட்டுமே இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

வீரர்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. இக்கட்டான சூழ்நிலைகளின் போது, வீரர்களை விளையாடுமாறு கட்டாயப்படுத்தவும் கூடாது.

இந்தியாவில் விளையாடுவது பாதுகாப்பானது தான் என உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவோம்.

எனினும், இது தொடர்பாக வீரர்களை நான் கட்டாயப்படுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுடன் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வந்த இங்கிலாந்து அணி, 5-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இந்நிலையில் மும்பை பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக தங்களது சுற்றுப்பயணத்தை ரத்து செய்த அந்த அணி இன்று பெங்களூரிலிருந்து தாயகம் புறப்பட்டு சென்றது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இங்கிலாந்து அணி டெஸ்டில் பங்கேற்கும்!
தாயகம் திரும்புகிறது இங்கிலாந்து கிரிக்கெட்
கட்டாக் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி
5வது ஒருநாள்: இந்தியா 51
5வது ஒருநாள்: இங்கிலாந்து 270
பீட்டர்சன் அரை சதம்: இங்கிலாந்து 158- 4
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...