யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து அணி டெஸ்டில் பங்கேற்கும்!
28 நவம்பர் 2008   ( 12:40 IST )
மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து, எஞ்சிய 2 ஒருநாள் போட்டிகளை ரத்து செய்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்கும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மும்பையில் நட்சத்திர விடுதிகளிலும், ரயில் நிலையங்களிலும் பயங்கரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதல்களில் இதுவரை சுமார் 127 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து 7 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து, 5 போட்டிகளில் தோல்வியடைந்து எஞ்சிய 2 போட்டிகளில் பங்கேற்பதை ரத்து செய்தது.

இந்நிலையில், அந்த அணி இங்கிலாந்து திரும்பும் என்றும், டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காது என்றும் நேற்று தகவல்கள் வெளியாகின.

ஆனால் இந்தியாவிற்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி பங்கேற்காது என செய்திகள் வெளியாகின.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், இங்கிலாந்து அதிகாரிகளுடன் இதுதொடர்பாக பேச்சு நடத்தினர்.

இதையடுத்து இங்கிலாந்து அணி, டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டது. இத்தகவலை இங்கிலாந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தாயகம் திரும்புகிறது இங்கிலாந்து கிரிக்கெட்
கட்டாக் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி
5வது ஒருநாள்: இந்தியா 51
5வது ஒருநாள்: இங்கிலாந்து 270
பீட்டர்சன் அரை சதம்: இங்கிலாந்து 158- 4
5-வது ஒருநாள்: டாஸ் வென்று இந்தியா பந்து வீச்சு
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...