யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
தாயகம் திரும்புகிறது இங்கிலாந்து கிரிக்கெட்
கட்டாக் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 27 நவம்பர் 2008   ( 13:42 IST )
மும்பை தீவிரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி தனது இந்தியச் சுற்றுப் பயணத்தை ரத்து செய்து உடனடியாகத் தாயகம் திரும்புகிறது.

கிவின் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 7 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டு இருந்தது.

தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 5 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 5- 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் மும்பையில் நடந்துள்ள தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவத்தால் அந்த அணி வீரர்கள் நிலை குலைந்து போயுள்ளனர். இதன் காரணமாக எஞ்சியுள்ள தனது போட்டிகளை அந்த அணி ரத்து செய்யத் தீர்மானித்திருப்பதாக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனேகமாக இங்கிலாந்து வீரர்கள் இன்றிரவே லண்டனுக்குத் திரும்பிச் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே வரும் 29, டிசம்பர் 2 ஆம் தேதிகளில் 6, 7-வது ஒருநாள் போட்டிகள் நடைபெறவிருந்தன. அதன் பின்னர் 11 ஆம் தேதி அகமதாபாத்தில் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியும், 19 ஆம் தேதி மும்பையில் 2-வது டெஸ்ட் போட்டியும் நடைபெறவிருந்தது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கட்டாக் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி
5வது ஒருநாள்: இந்தியா 51
5வது ஒருநாள்: இங்கிலாந்து 270
பீட்டர்சன் அரை சதம்: இங்கிலாந்து 158- 4
5-வது ஒருநாள்: டாஸ் வென்று இந்தியா பந்து வீச்சு
கால்பந்து வீரர் பீட்டர் தங்கராஜ் மரணம்
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...