|
| கட்டாக் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி |
| கட்டாக் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 27 நவம்பர் 2008 ( 11:55 IST ) | |
இங்கிலாந்துக்கு எதிராக கட்டாக்கில் நேற்று நடந்த 5-வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
வெற்றிக்கு 271 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய இந்தியா, 43.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 273 ரன்களை எடுத்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய சச்சின் - சேவாக் ஜோடி அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தது. அபாரமாக விளையாடிய சேவாக்கும், சச்சினும் அடுத்தடுத்து அரை சதம் கடந்தனர்.
சச்சின் 50 ரன்களுக்கு வெளியேறினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 91 ரன்கள் (73 பந்துகள்) எடுத்தபோது சேவாக் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த யுவராஜ் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய தோனி- சுரேஷ் ரெய்னா ஜோடி, ஒன்றும் இரண்டுமாக ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் தோனி 50 ரன்களுக்கு அவுட் ஆனார். இறுதியில் 43.4 ஓவர்களின் இந்தியா வெற்றி இலக்கை எட்டியது.
சுரேஷ் ரெய்னா 53 ரன்களுடனும், ரோகித் சர்மா 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஹார்மிசன், பிராட், பிளிண்டாப், போபரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
முன்னதாக டாஸ் வென்ற இந்தியா இங்கிலாந்தை பேட் செய்யக் கேட்டுக் கொண்டது. அதன்படி அந்த அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது. பீட்டர்சன் 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் 5- 0 என்ற கணக்கில் தொடரில் இந்தியா முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகனாக வீரேந்திர சேவாக் தேர்வு செய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கு இடையே 6-வது ஒருநாள் போட்டி வரும் 29 ஆம் தேதி கவுஹாத்தியில் நடைபெறுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|