|
| 5வது ஒருநாள்: இந்தியா 51 |
| கட்டாக் (ஏஜென்சி), 26 நவம்பர் 2008 ( 19:40 IST ) | |
இங்கிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 8வது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய போபரா 24, குக் 11 ரன்கள் எடுத்தனர். காலிங்வுட் 40 ரன்கள் எடுத்தனர். ஷா 66 ரன்களுடனும், பீட்டர்சன் 111 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 270 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணி களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக்கும், தெண்டுல்கரும் களமிறங்கினர்.
8.5வது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது இந்தியா.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|