|
| 5வது ஒருநாள்: இங்கிலாந்து 270 |
| கட்டாக் (ஏஜென்சி), புதன்கிழமை, 26 நவம்பர் 2008 ( 18:42 IST ) | |
இந்தியா- இங்கிலாந்து இடையேயான 5வது ஒருநாள் போட்டியில், முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு 271 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததால் இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய போபரா, குக் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்கத் தொடங்கினர். எனினும், குக் 11 ரன்களிலும், போபரா 24 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதன் பின்னர் வந்த கேப்டன் பீட்டர்சன், அதிரடியாக விளையாடினார். இந்திய வீரர்களின் பந்துவீச்சை நான்குபுறமும் சிதறடித்து ரன்களை குவித்தார்.
அவருடன் இணைந்து ஆடிய காலிங்வுட் 40 ரன்களில் வெளியேறினார். பிளிண்டாப் ரன் எதுவும் எடுக்காமல் வந்தவேகத்தில் வெளியேற, பின்னர் ஜோடி சேர்ந்த ஷா 66 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக பீட்டர்சன் 111 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 270 ரன்கள் குவித்தது.
இந்தியா தரப்பில் ஜாகீர்கான் 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|