யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
பீட்டர்சன் அரை சதம்: இங்கிலாந்து 158- 4
கட்டாக் (ஏஜென்சி), புதன்கிழமை, 26 நவம்பர் 2008   ( 16:48 IST )
இந்தியாவுக்கு எதிராக கட்டாக்கில் நடைபெற்று வரும் 5-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி நல்ல தொடக்கத்தைப் பெற்றுள்ளது. பீட்டர்சன் அரை சதம் அடித்தார்.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் இங்கிலாந்தை பேட் செய்யும்படி கேட்டுக் கொண்டது. இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து தொடக்க வீரர்கள் போபரா, குக் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்கத் தொடங்கினர்.

எனினும் இந்த ஜோடியை தனது அபார பந்துவீச்சால் ஜாகீர்கான் பிரித்தார். குக் 10 ரன்களுக்கும், போபரா 24 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதன் பின்னர் வந்த கேப்டன் பீட்டர்சன், அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அவருக்கு பக்கபலமாக விளங்கிய காலிங்வுட் 40 ரன்கள் எடுத்து, ஹர்பஜன் பந்தில் வெளியேறினார். பின்னர் வந்த ஆல் ரவுண்டர் பிளிண்டாப் இஷாந்த் சர்மா பந்தில் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.

30.4 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது. பீட்டர்சன் 66 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
5-வது ஒருநாள்: டாஸ் வென்று இந்தியா பந்து வீச்சு
கால்பந்து வீரர் பீட்டர் தங்கராஜ் மரணம்
5-வது ஒருநாள்: இந்தியா, இங்கிலாந்து இன்று மோதல்
கட்டாகில் நாளை 5-வது ஒருநாள் போட்டி
மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் சைமண்ட்ஸ்
ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் அபராதம்
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...