|
| 5-வது ஒருநாள்: டாஸ் வென்று இந்தியா பந்து வீச்சு |
| கட்டாக் (ஏஜென்சி), புதன்கிழமை, 26 நவம்பர் 2008 ( 15:23 IST ) | |
கட்டாக் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கட்டாகில் 5-வது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, இங்கிலாந்தை பேட் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
இதன்படி போபராவும், குக்கும் இங்கிலாந்து ஆட்டத்தை தொடங்கினர். ஆரம்பத்தில் இருவரும் வேகமாக ரன்களைக் குவிக்கத் தொடங்கினர். இதற்கு ஜாகீர்கான் முற்றுப் புள்ளி வைத்தார். 10 ரன்கள் எடுத்திருந்த குக்கை அவர் வெளியேற்றினார். அப்போது அணியின் ரன் எண்ணிக்கை 33 ஆக இருந்தது.
7 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்திருந்தது. போபரா 15 ரன்களுடனும், பீட்டர்சன் 4 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
இன்றைய ஆட்டத்தில் இரு தரப்பிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தனர். இந்திய அணியில் காம்பீர், முனாப் படேலுக்கு பதில் இர்பான் பதானும், ரோகித் சர்மாவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள இங்கிலாந்து அணியில் பெல் மற்றும் ஆண்டர்சனுக்கு பதில் குக், ஹார்மிசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|