|
| கால்பந்து வீரர் பீட்டர் தங்கராஜ் மரணம் |
| பொகாரோ (ஏஜென்சி), புதன்கிழமை, 26 நவம்பர் 2008 ( 12:25 IST ) | |
இந்திய கால்பாந்து வீரர் பீட்டர் தங்கராஜ் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 72.
கடந்த 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய கால்பந்துப் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது. அந்தப் போட்டியில் இந்திய அணியின் கோல் கீப்பராக இருந்த பீட்டர் தங்கராஜ், பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
கடந்த சில மாதங்களாக உடல் நலமின்றி இருந்த தங்கராஜ், திங்கட் கிழமையன்று பொகாரோவில் உள்ள பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றிரவே சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
ஆசியாவின் சிறந்த கோல் கீப்பர் என்ற சிறப்பை பெற்ற பீட்டர் தங்கராஜ், 1954, 1958, 1962, 1966 ஆம் ஆண்டு ஆசியப் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி உள்ளார்.
கடந்த 1968 ஆம் ஆண்டு தங்கராஜுக்கு அர்ஜுனா விருது அளிக்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டுகளில் ஆசிய அனைத்து நட்சத்திர கால்பந்து அணியில் இருமுறை இடம்பெற்று சாதனை புரிந்தார்.
1956 ஆம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக், 1960 ஆம் ஆண்டு ரோம் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடிய இந்திய அணியில் தங்கராஜ் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|