யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
ராஜினாமா மிரட்டலா? தோனி மறுப்பு
பெங்களூரு (ஏஜென்சி), 22 நவம்பர் 2008   ( 18:16 IST )
கேப்டன் பதவியில் இருந்து விலகிவிடுவதாக வெளியான செய்தியையும், பி.சி.சி.ஐ. உடன் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுவதையும் மகேந்திர சிங் தோனி திட்ட வட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பாக பெங்களூருவில் சனிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய தோனி, ஆர்.பி.சிங்கை அணியில் சேர்க்காததால் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுவதை அடியோடு மறுத்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக கற்பனையான தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக மிரட்டல் எதையும் பி.சி.சி.ஐ-க்கு விடுக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

ராஜினாமா செய்வது பற்றி தான் எதுவும் சிந்திக்கவில்லை ; எங்கிருந்து இத்தகைய தகவல்கள் வெளியாகிறது என்பது தனக்கு தெரியவில்லை என்றார் தோனி.

ஆர்.பி.சிங், இர்பான் பதான் ஆகிய இருவருமே தன் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், தேர்வு தொடர்பாக அணிக்குள் எந்த பிரச்னையும் இல்லை என்றும் கேப்டன் தோனி தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான 4, 5-வது ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி கடந்த 20 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி அணியில் இருந்து ஆர்.பி. சிங், முரளி விஜய் ஆகியோர் நீக்கப்பட்டு, டெண்டுல்கர், இர்பான் பதான் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

ஆர்.பி. சிங் நீக்கப்பட்டது கேப்டன் தோனிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய அவர் முன் வந்ததாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கேப்டன் பதவியை துறக்க முன்வந்தார் தோனி?
நாளை பெங்களூருவில் 4வது ஒருநாள்
செஸ் ஒலிம்பியாட்:இந்தியா வெற்றி
சவுரவ் கங்குலிக்கு பிபிசிஐ-யில் பதவி
ஒருநாள் போட்டி : இந்திய அணிக்கு திரும்பினார் சச்சின்
சென்னை திரும்பினார் ஆனந்த்
செய்திகள்
தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...