|
| கேப்டன் பதவியை துறக்க முன்வந்தார் தோனி? |
| பெங்களூரு (ஏஜென்சி), சனிக்கிழமை, 22 நவம்பர் 2008 ( 17:55 IST ) | |
இந்திய அணியில் ஆர்.பி.சிங் அணியில் சேர்க்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்டன் பதவியில் இருந்து விலக தோனி முன் வந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 4 மற்றும் 5-வது ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை, ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழு கடந்த 20 ஆம் தேதி கான்பூரில் அறிவித்தது.
அதன்படி அணியில் இருந்து ருத்ர பிரதாப் சிங் மற்றும் தமிழகத்தின் முரளி விஜய் ஆகியோர் நீக்கப்பட்டு, சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இந்திய அணியில் இருந்து ஆர்.பி. சிங் நீக்கப்பட்டது கேப்டன் தோனிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய அவர் முன் வந்ததாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தேர்வுக் குழு மீது வருத்தத்தில் உள்ள கேப்டன் தோனியை சமாதானம் செய்யும் முயற்சியில் பி.சி.சி.ஐ. தலைவர் ஷஷங் மனோகர் இறங்கியுள்ளதாகவும், அந்தத் தகவல் கூறுகிறது.
தோனி தலைமையில் இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில், கேப்டன் பதவியை அவர் ராஜினாமா செய்ய முன் வந்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு, தேர்வுக்குழுவின் முடிவைக் கண்டித்து அப்போதையக் கேப்டன் ராகுல் திராவிட்டும் இதேபோல் பதவி விலகுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|