யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
நாளை பெங்களூருவில் 4வது ஒருநாள்
பெங்களூரு (ஏஜென்சி), சனிக்கிழமை, 22 நவம்பர் 2008   ( 13:31 IST )
இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 4-வது ஒருநாள் போட்டி, பெங்களூருவில் நாளை பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து உள்ளது.

கெவின் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிராக 7 ஒருநாள் போட்டிகளில் விளையடுகிறது. இதுவரை நடந்த 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 3- 0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையே 4-வது ஒருநாள் போட்டி பெங்களூருவில் நாளை, பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றாக வேண்டிய கடும் நெருக்கடியுடன் களமிறங்குகிறது இங்கிலாந்து.

ராஜ்கோட்டில் நடந்த முதல் போட்டியில் 158 ரன்கள் வித்தியாசத்திலும், இந்தூர் போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து மோசமான தோல்வியை சந்தித்தது. கான்பூரில் நடந்த 3-வது போட்டியிலும் அதிர்ஷ்டமில்லை. டக்வொர்த் லீவிஸ் முறைப்படி அதன் தோல்வி அங்கும் தொடர்ந்தது.

எனவே பெங்களூரு போட்டியில் வென்று, நெருக்கடியை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர்.

இதற்கு மாறாக நாளையைப் போட்டியில் வெற்றி பெற்று 4- 0 என்ற கணக்கில் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா உள்ளது. முந்தைய இரு போட்டிகளைப் போல் அல்லாமல் கான்பூரில் இந்தியாவின் ஆட்டம் அவ்வளவாகக் குறிப்பிடப்படும்படி இல்லை.

எனவே நாளையப் போட்டியில் அலட்சியம் காட்டாமல் வெற்றியைப் பறிக்க தோனியின் படை தயாராக இருக்கும். இதனால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று நம்பலாம்.

இப்போட்டியில் ஆர்.பி.சிங், முரளி ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதில் சச்சின், இர்பான் பதான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
செஸ் ஒலிம்பியாட்:இந்தியா வெற்றி
சவுரவ் கங்குலிக்கு பிபிசிஐ-யில் பதவி
ஒருநாள் போட்டி : இந்திய அணிக்கு திரும்பினார் சச்சின்
சென்னை திரும்பினார் ஆனந்த்
16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
காம்பீர், ரெய்னா ஏமாற்றம்: சேவாக் அரைசதம்
செய்திகள்
தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...