|
| சவுரவ் கங்குலிக்கு பிபிசிஐ-யில் பதவி |
| புதுடெல்லி (ஏஜென்சி), 21 நவம்பர் 2008 ( 13:11 IST ) | |
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சவுரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தொழில் நுட்பக் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் சவுரவ் கங்குலி. அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தொழில் நுட்பக் குழுவில் அவருக்கு உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை வெளியிட்ட பிசிசிஐ செயலாளர் சீனிவாசன், கிரிக்கெட்டுக்கு கங்குலி ஆற்றிய பணிகள், 20 ஆண்டு கால தொடர்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பிசிசிஐ தொழில் நுட்பக் குழுவில் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், சேட்டன் சவுகான், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|