|
| ஒருநாள் போட்டி : இந்திய அணிக்கு திரும்பினார் சச்சின் |
| கான்பூர் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008 ( 13:10 IST ) | |
இங்கிலாந்து அணிக்கு எதிரான அடுத்த 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், இர்பான் பதான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கான்பூரில் நேற்று நடந்த ஒருநாள் போட்டிக்குப் பின் ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் இறுதியில் சச்சின் உட்பட 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது.
அதன்படி அடுத்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளில் சச்சின், இர்பான் பதான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.அவர்களுக்குப் பதில் ஆர்.பி.சிங், தமிழக வீரர் எம். விஜய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ஒருநாள் போட்டியில் சுமார் 8 மாத இடைவெளிக்குப்பின் இந்திய அணிக்கு நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் மீண்டும் திரும்பியுள்ளார்.
கடைசியாக கடந்த மார்ச் மாதம் பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சச்சின் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|