யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
சென்னை திரும்பினார் ஆனந்த்
சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008   ( 11:59 IST )
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் நேற்றிரவு சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த மாதம் ஜெர்மனில் உள்ள பார்ன் நகரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்த், 3-வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார்.

இதன் பின்னர் சில நாட்கள் வெளிநாடுகளில் தங்கியிருந்த அவர், நேற்றிரவு சொந்த மண்ணான சென்னைக்குத் திரும்பினார்.

நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் தனது மனைவியுடன் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்த ஆனந்த்துக்கு, தமிழக செஸ் கூட்டமைப்பின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை அணிவிக்கப்பட்டு மேளதாளத்துடன் ஆனந்த் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

ஏராளமான பள்ளி மாணவ- மாணவிகள், செஸ் ரசிகர்கள் உட்பட பலர், விஸ்வநாதன் ஆனந்தை வரவேற்பதற்காக சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த், 'உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் அனைத்துப் பிரிவு போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற பெருமையைப் பெற்றுள்ளேன். இது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
காம்பீர், ரெய்னா ஏமாற்றம்: சேவாக் அரைசதம்
இந்தியாவுக்கு இலக்கு 241 ரன்கள்
கான்பூர் ஒருநாள்: இங்கிலாந்து சிறப்பான தொடக்கம்
மலேசியா ஸ்குவாஷ்: அரையிறுதியில் ஜோஷ்னா
டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங்
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...