யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
கான்பூர் (ஏஜென்சி), 20 நவம்பர் 2008   ( 17:20 IST )
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 3-வது போட்டி கான்பூரில் இன்று நடந்தது.

பனி மூட்டம், வெளிச்சமின்மை காரணமாக போட்டி தொடங்குவது தாமதமாகி ஆட்டம் 49 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது.

தொடக்க வீரர்கள் போபரா (60), பெல் (46) ஆகியோர் நல்ல தொடக்கத்தைத் தந்தபோதும் பின்னர் வந்த வீரர்கள் சோபிக்கத் தவறினர்.

பீட்டர்சன் (13), காலிங்வுட் (1), பிரையர் (5) பிளிண்டாப் (26), ஸ்மித் படேல் (26), பிராட் (0), ஆண்டர்சன் (1) என எவரும் சொல்லிக் கொள்ளும்படி ஆடவில்லை.

எனினும் விக்கெட் சரிவை தடுத்து நிதானமாக விளையாடிய ஷா, 40 ரன்கள் எடுத்து அணி நல்ல ஸ்கோர் எட்ட உதவினார். கடைசியில் 48.4 ஓவர்களில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியத் தரப்பில் ஹர்பஜன் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, முன்னாப் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஜாகிர்கான், யுவராஜ் சிங், யூசுப் பதான் ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.

வெற்றிக்கு 241 ரன்கள் தேவை என்ற நிலையில் களம் புகுந்தது இந்தியா. காம்பீர் (14), சுரேஷ் ரெய்னா (1) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்து அதிர்ச்சி தர, சேவாக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தார். 68 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 125/4.

ரோகித் சர்மா 28 ரன்களுக்கு வெளியேறினார். கடந்த 2 போட்டிகளில் சதமடித்த யுவராஜ், தோனியுடன் இணைந்து ரன் ரேட்டை உயர்த்தினார். எனினும் அவர் 31 பந்தில் 38 ரன்களுக்கு அவுட் ஆனார்.

40 வது ஓவரில் 5 விக்கெட் இழந்து இந்தியா 198 ரன்கள் எடுத்திருந்தபோது மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாத சூழல் உண்டானது. அப்போது தோனி 29 ரன்களுடனும், பதான் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்திய வெற்றிக்கு 60 பந்துகளில் 42 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. எனினும் வெளிச்சப் பற்றாக்குறையால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர்.

அதாவது அந்த கணக்கீட்டின்படி இந்தியா 40 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்திருந்தாலே போதுமானது. எனினும் கூடுதலாக 16 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஹர்பஜன் அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 7 போட்டிகள் கொண்ட தொடரில் 3- 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே தொடரை அது கைப்பற்றிவிடும்.

இரு அணிகளுக்கு இடையே 4-வது ஒருநாள் போட்டி வரும் 23 ஆம் தேதி பெங்களூருவில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காம்பீர், ரெய்னா ஏமாற்றம்: சேவாக் அரைசதம்
இந்தியாவுக்கு இலக்கு 241 ரன்கள்
கான்பூர் ஒருநாள்: இங்கிலாந்து சிறப்பான தொடக்கம்
மலேசியா ஸ்குவாஷ்: அரையிறுதியில் ஜோஷ்னா
டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங்
சாம்பியன்ஸ் லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...