யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
காம்பீர், ரெய்னா ஏமாற்றம்: சேவாக் அரைசதம்
கான்பூர் (ஏஜென்சி), 20 நவம்பர் 2008   ( 15:14 IST )
கான்பூர் ஒருநாள் போட்டியில் காம்பீர், சுரேஷ் ரெய்னா விரைவில் ஆட்டமிழந்து நெருக்கடியை ஏற்படுத்த, அரை சதம் அடித்து சேவாக் அணியை சரிவில் இருந்து மீட்டார்.

வெற்றி பெற 49 ஓவர்களில் 241 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்தியா களமிறங்கியது. சேவாக், காம்பீர் ஆகியோர் வழக்கமான அதிரடியுடன் தங்கள் ஆட்டத்தைத் தொடங்கினர்.

14 ரன்கள் எடுத்த நிலையில் காம்பீர் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சுரேஷ் ரெய்னாவும் 1 ரன் எடுத்து உடனே பெவிலியன் திரும்பினார். அப்போது அணியின் ஸ்கோர் 34.

இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய ரோகித் சர்மா, சேவாக்குடன் இணைந்து நிதானமாக விளையாடி வருகிறார். அனுபவ வீரர் சேவாக் தனது வழக்கமான அதிரடிப் பாணியில் விளையாடி அரை சதம் அடித்தார்.

21 ஓவர்கள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. சேவாக் 59 ரன்களுடனும், சர்மா 25 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் பிராட், பிளிண்டாப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 49 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக போபரா 60 ரன்கள் எடுத்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்தியாவுக்கு இலக்கு 241 ரன்கள்
கான்பூர் ஒருநாள்: இங்கிலாந்து சிறப்பான தொடக்கம்
மலேசியா ஸ்குவாஷ்: அரையிறுதியில் ஜோஷ்னா
டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங்
சாம்பியன்ஸ் லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு
4 போட்டிகளுக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...