யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
இந்தியாவுக்கு இலக்கு 241 ரன்கள்
கான்பூர் (ஏஜென்சி), 20 நவம்பர் 2008   ( 13:30 IST )
கான்பூரில் நடைபெறும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற 241 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து நிர்ணயித்துள்ளது.

இந்திய- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் 3-வது போட்டி கான்பூரில் இன்று நடக்கிறது. பனி மூட்டம் காரணமாக போட்டி தொடங்குவது தாமதமானது. இதனால் ஆட்டம் 49 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்கள் போபரா (60), பெல் (46) ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தனர்.

எனினும் பின்னர் வந்த வீரர்கள் இதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பீட்டர்சன் 13 ரன்களுக்கும், காலிங்வுட் 1 ரன்னுக்கும், பிரையர் 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

பிளிண்டாப், ஸ்மித் படேல் ஆகியோர் தலா 26 ரன்கள் எடுத்து வெளியேறினர். விக்கெட் சரிவை தடுத்து நிதானமாக விளையாடிய ஷா, 40 ரன்கள் எடுத்து அணி நல்ல ஸ்கோர் எட்ட உதவினார்.

கடைசி கட்டத்தில் களமிறங்கிய பிராட் ரன் எடுக்காமலும், ஆண்டர்சன் ஒரு ரன்னுக்கும் வெளியேற, 48.4 ஓவர்களில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியத் தரப்பில் ஹர்பஜன் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, முன்னாப் படேல் தலா 2விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஜாகிர்கான், யுவராஜ் சிங், யூசுப் பதான் ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.

ஹர்பஜன் 200: இன்றையப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஓவைஸ் ஷாவின் (40 ரன்கள்) விக்கெட்டை ஹர்பஜன் கைப்பற்றினார். இது, ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அவருக்கு கிடைத்த 200-வது விக்கெட் ஆகும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கான்பூர் ஒருநாள்: இங்கிலாந்து சிறப்பான தொடக்கம்
மலேசியா ஸ்குவாஷ்: அரையிறுதியில் ஜோஷ்னா
டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங்
சாம்பியன்ஸ் லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு
4 போட்டிகளுக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு
தரவரிசை: 3-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...