யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
கான்பூர் ஒருநாள்: இங்கிலாந்து சிறப்பான தொடக்கம்
கான்பூர் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008   ( 11:30 IST )
இந்தியாவுக்கு எதிராக கான்பூரில் நடைபெற்று வரும் 3வது ஒருநாள் போட்டியை இங்கிலாந்து அணி சிறப்பாகத் தொடங்கியுள்ளது.

கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, கடும் பனி மூட்டம் காரணமாக சற்று தாமதமாகத் தொடங்கியது. இதனால் ஆட்டம் 49 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பீட்டர்சன், பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி போபரா, பெல் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.

வேகமாக ரன் குவித்த போபரா, 46 ரன்களுக்கு படேல் பந்தில் தோனியிடம் கேச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் பீட்டர்சன் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரது விக்கெட்டை ஹர்பஜன் கைப்பற்றினார்.

20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. போபரா 41 ரன்களுடனும், காலிங்வுட் ரன் எண்ணிக்கையைத் தொடங்காமலும் விளையாடி வருகின்றனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மலேசியா ஸ்குவாஷ்: அரையிறுதியில் ஜோஷ்னா
டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங்
சாம்பியன்ஸ் லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு
4 போட்டிகளுக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு
தரவரிசை: 3-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்
மைக்கேல் பெல்ப்சுக்கு கோல்டன் கூகுள் விருது
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...