யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங்
கான்பூர் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008   ( 09:55 IST )
இந்தியாவுக்கு எதிராக கான்பூரில் நடைபெறும் 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.வானிலை காரணமாக ஆட்டம் தொடங்குவது தாமதமானது.

இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பூரில் இன்று காலை நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன், தனது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

கான்பூரில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆட்டத்தின் ஓவர்கள் குறைக்கப்படலாம் என்று தெரிகிறது.

இங்கிலாந்து தரப்பில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஹார்மிசனுக்குப் பதில் கிரேம் ஸ்வான் சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர அந்த அணியின் பேட்டிங் வரிசையும் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காயத்தில் இருந்து விடுபட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் ஆர்.பி.சிங் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதுவரை நடந்துள்ள 2 போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்று, 7 போட்டிகள் கொண்ட தொடரில் 2- 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சாம்பியன்ஸ் லீக்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு
4 போட்டிகளுக்கான இந்திய அணி நாளை அறிவிப்பு
தரவரிசை: 3-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்
மைக்கேல் பெல்ப்சுக்கு கோல்டன் கூகுள் விருது
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கங்குலி
54 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...