|
| தரவரிசை: 3-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம் |
| துபாய் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 18 நவம்பர் 2008 ( 17:09 IST ) | |
இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் பெற்ற தொடர் வெற்றியை அடுத்து ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. யுவராஜ் சிங் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் தரவரிசைப் பட்டியலை துபாயில் வெளியிட்டுள்ளது.
ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்திடம் பெற்ற அபார வெற்றியின் மூலம் இந்தியா 5-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ராஜ்கோட், இந்தூர் போட்டிகளில் சதம் அடித்து ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்ற யுவராஜ் சிங், 11 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 6-வது இடத்தைப் பெற்றுள்ளார். இதுவே அவர் பெற்ற சிறப்பான முன்னேற்றம் ஆகும்.
இந்தியாவிடம் படுதோல்வியைச் சந்தித்த இங்கிலாந்து, 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் வெற்றி தொடருமானால், அது 2-வது இடத்தைப் பெறும் சாத்தியக்கூறுகள் உள்ளன.
தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்திலும், தென் ஆப்ரிக்கா 2-வது இடத்திலும் உள்ளன. துபாயில் நடந்த மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை 3- 0 என்ற கணக்கில் வென்ற பாகிஸ்தான் அணி, 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|