|
| மைக்கேல் பெல்ப்சுக்கு கோல்டன் கூகுள் விருது |
| நியூயார்க் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 18 நவம்பர் 2008 ( 12:24 IST ) | |
பீஜிங் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் சாதனைகள் படைத்த அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்சுக்கு கோல்டன் கூகுளின் 3 விருதுகள் வழங்கப்பட்டன.
நியூயார்க்கில் நேற்று நடந்த அமெரிக்க நீச்சல் போட்டிகள் கூட்டமைப்பின் வருடாந்திர விருந்து நிகழ்ச்சியில், ஒலிம்பிக்கில் மட்டும் 8 முறை தங்கம் வென்ற பெல்ப்சுக்கு அமெரிக்காவின் சிறந்த தடகள வீரர் விருது அளிக்கப்பட்டது.
இதேபோல், மகளிர் பிரிவில் 6 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற அமெரிக்க வீராங்கனை நதாலி காக்லின், இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். 200 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் சாதனை படைத்த ரெபெக்கா சோனிக்கும், ஒரு விருது வழங்கப்பட்டது.
பெல்ப்சின் பயிற்சியாளர் பாப் போவ்மேன், சிறந்த பயிற்சியாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|