|
| 54 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி |
| இந்தூர் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008 ( 17:00 IST ) | |
இந்தூரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2- 0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. ராஜ்கோட்டில் நடந்த முதல் போட்டியில் 158 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் 2-வது போட்டி இந்தூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற கேப்டன் தோனி, இந்தியா பேட் செய்யும் என அறிவித்தார். இதன்படி இந்தியா 50 ஓவர்களில் 292 ரன்கள் குவித்தது.
கடந்த போட்டியில் சதம் அடித்த யுவராஜ் இன்றும் அசத்தினார். அவர் சதமடித்து 118 ரன்களுக்கு அவுட் ஆனார். காம்பீர் 70, யூசப் பதான் 50* ஆகியோரும் இந்தியாவின் ரன் குவிப்புக்கு உதவினர்.
வெற்றிக்கு 293 ரன்கள் தேவை என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, முதலில் பெல்லின் (1) விக்கெட்டை இழந்து தடுமாறியது. ஷா, பிரையர் ஆகியோர் ஓரளவு சரிவை தடுத்து ரன்களைச் சேர்த்தனர்.
எனினும் யுவராஜ் சிங்கின் மந்திரப் பந்து வீச்சில் இங்கிலாந்தின் முக்கிய பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர். பிரையர் (38 ரன்கள்) ஷா (58), பீட்டர்சன் (33), பிளின்டாப் (43) ஆகியோரை யுவராஜ் வெளியேற்றினார்.
பின்னர் வந்த காலிங்வுட் (2), போபரா (3), ஹார்மிசன் (6) ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பட்டேல் (20), பிராட் (22) ஆகியோர் ஓரளவு தாக்குப் பிடித்து நின்றபோதும் இங்கிலாந்தின் தோல்வியைத் தடுக்க முடியவில்லை.
இறுதியில் 47 ஓவர்களில் 238 ரன்களுக்கு இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்தியா 54 ரன்கள் வித்தியாசத்தில் 2 ஆவது வெற்றியைப் பெற்றது. ஆட்டநாயகனாக யுவராஜ் அறிவிக்கப்பட்டார்.
இதன் மூலம் 7 போட்டிகள் கொண்ட தொடரில் 2- 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. 3ஆவது போட்டி வரும் 20 ஆம் தேதி கான்பூரில் நடைபெறுகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|