|
| பவுலிங்கிலும் யுவராஜ் அசத்தல்: இங்கி. 184/6 |
| இந்தூர் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008 ( 16:49 IST ) | |
இந்தூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங்கின் அபார பந்துவீச்சில் இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.
வெற்றிக்கு 293 ரன்கள் தேவை என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, முதலில் பெல்லின் (1) விக்கெட்டை இழந்து அதிர்ச்சியை சந்தித்தது. எனினும் ஷா, பிரையர் ஆகியோர் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர்.
இன்றைய ஆட்டத்தில் அபாரமாக ஆடி சதம் அடித்த யுவராஜ்சிங், பவுலிங்கிலும் ஜொலித்தார். பிரையரை 38 ரன்களுக்கு வெளியேற்றிய யுவராஜ், அரை சதம் கடந்து நின்ற ஷாவையும் (58) பெவிலியன் திரும்பச் செய்தார்.
இதேபோல் கேப்டன் பீட்டர்சன் (33), பிளின்டாப் (43) ஆகியோர் விக்கெட்டையும் கைப்பற்றி இங்கிலாந்தின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டார் யுவராஜ். நெருக்கடியும் வந்த காலிங்வுட் 2 ரன்களுக்கு ஹர்பஜன் பந்தில் வந்த சுவடு தெரியாமல் வெளியேறினார்.
40 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது. பட்டேல் 2 ரன்களுடனும், போபரா ரன் கணக்கைத் தொடங்காமலும் களத்தில் இருந்தனர்.
முன்னதாக இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்து, 50 ஓவர்களில் 292 ரன்கள் குவித்தது. யுவராஜ் 118, காம்பீர் 70, யூசப் பதான் 50* ஆகியோர் இந்தியா ரன் குவிக்க உதவினர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|