யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்துக்கு வெற்றி இலக்கு 293 ரன்கள்
இந்தூர் (ஏஜென்சி), 17 நவம்பர் 2008   ( 13:00 IST )
இந்தூர் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற 293 ரன்கள் என்ற இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது. அபாரமாக ஆடி யுவராஜ் சிங் சதமடிக்க, யூசுப் பதான் விரைவாக அரை சதம் கடந்தார்.

இந்தூரில் இன்று நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று இந்தியா முதலில் பேட் செய்தது.இந்தியாவின் தொடக்கம் ஏமாற்றம் தரும் வகையில் அமைந்தது.

சேவாக் (1), சுரேஷ் ரெய்னா (4), ரோகித் சர்மா ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த யுவராஜ் சிங், தொடக்க வீரர் காம்பீருடன் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டார். அபாரமாக விளையாடி அரை சதம் அடித்த காம்பீர், 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மறு முனையில் அதிரடியாக விளையாடிய யுவராஜ் சிங், ஒருநாள் போட்டியில் தனது 10-வது சதத்தை நிறைவு செய்தார். 118 ரன்களுக்கு அவர் வெளியேறினார்.

அடுத்து வந்த கேப்டன் தோனி 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹர்பஜன் (8), ஜாகிர்கான் (1), ஆர்.பி.சிங் (4) ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.

பின்கள வரிசையில் களமிறங்கிய யூசுப் பதான் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 50 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

50 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் பிராட் 4 விக்கெட்டுகளையும், பீட்டர்சன், காலிங்வுட், ஹார்மிசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'3 ஆண்டில் சாய்னா முதலிடம் பிடிப்பார்'
சரிவில் இருந்து மீண்டது இந்தியா
இந்தூர் ஒருநாள்: இந்தியா மோசமான துவக்கம்
மலேசிய ஸ்குவாஷ்: பட்டம் வென்றார் ஜோஷ்னா
இந்தூரில் 2வது ஒருநாள்: இந்திய வெற்றி தொடருமா?
ஐ.பி.எல் போட்டியில் விளையாடவில்லை: போலாக்!
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...