|
| '3 ஆண்டில் சாய்னா முதலிடம் பிடிப்பார்' |
| பெங்களூரு (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008 ( 12:16 IST ) | |
அடுத்த 3 ஆண்டுகளில் மகளிர் பேட்மிண்டனில் இந்தியாவின் சாய்னா நெவால் முதலிடத்தைப் பிடிப்பார் என்று, முன்னாள் உலகச் சாம்பியனான பிரகாஷ் படுகோன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
19 வயதாகும் இளம் வீராங்கனை சாய்னாவுக்கு பேட்மிண்டன் சாம்பியனாவதற்கான உடல் தகுதி, மனவுறுதி, தன்னம்பிக்கை உள்ளிட்ட எல்லாத் தகுதிகளும் உள்ளன.
தற்போது அவரிடம் காணப்படும் கடின உழைப்பு, மனதை ஒருநிலைப்படுத்தி ஆட்டத்தில் கவனம் செலுத்துதல் தொடர்ந்தால், பேட்மிண்டன் போட்டியில் அவர் உச்ச நிலையை அடையலாம்.
தற்போது தரவரிசையில் 11ஆவது இடத்தில் உள்ள சாய்னா, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நிச்சயம் உலகின் நெம்பர் 1 வீராங்கனையாக வருவார். அடுத்த ஒராண்டுக்குள் முதல் 5 இடங்களுக்குள் வருவார்.
இவ்வாறு பிரகாஷ் படுகோன் தெரிவித்தார்.
முன்னாள் பேட்மிண்டன் வீரரான பிரகாஷ், உலகச் சாம்பியன் பட்டத்தை வென்று உலகின் முதல்நிலை வீரராகத் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|