|
| சரிவில் இருந்து மீண்டது இந்தியா |
| இந்தூர் (ஏஜென்சி), 17 நவம்பர் 2008 ( 11:26 IST ) | |
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் கவுதம் காம்பீர், யுவராஜ் சிங் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.
இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்தூரில் தற்போது 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
இங்கிலாந்து வீரர் பிராட்டின் அபார பந்து வீச்சால் இந்தியாவின் தொடக்க விக்கெட்டுகள் மளமளவென்று சரிந்தன. சேவாக் (1), சுரேஷ் ரெய்னா (4), ரோகித் சர்மா ஆகியோரை அவர் வெளியேற்றி, இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தார்.
எனினும் பின்னர் வந்த யுவராஜ் சிங், தொடக்க வீரர் காம்பீருடன் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டார். அபாரமாக விளையாடி அரை சதம் கடந்த காம்பீர், 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மறு முனையில் அதிரடியாக விளையாடி வரும் யுவராஜ் சிங், அரை சதம் கடந்து தற்போது சதத்தை நோக்கி முன்னேறி வருகிறார்.
32 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்துள்ளது. யுவராஜ் சிங் 81 ரன்களுடனும், கேப்டன் தோனி ஒரு ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.
இங்கிலாந்து தரப்பில் பிராட் 3 விக்கெட்டுகளையும், பீட்டர்சன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|