|
| இந்தூர் ஒருநாள்: இந்தியா மோசமான துவக்கம் |
| இந்தூர் (ஏஜென்சி), 17 நவம்பர் 2008 ( 09:57 IST ) | |
இந்தூரில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்று இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. 29 ரன்களுக்குள் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து மோசமான தொடக்கத்தைப் பெற்றது.
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2வது ஒருநாள் போட்டி, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற கேப்டன் மகேந்திரசிங் தோனி பேட்டிங் செய்யத் தீர்மானித்தார்.
இதன்படி சேவாக், காம்பீர் ஜோடி ஆட்டத்தைத் தொடங்கியது. அணியின் ரன் எண்ணிக்கை 4 ஆக இருந்தபோது, 1 ரன் எடுத்த நிலையில் சேவாக் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை பிராட் கைப்பற்றினார்.
அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா, 4 ரன்களுக்கு பிராட் பந்தில் பட்டேலிடம் கேச் கொடுத்து வெளியேறினார்.
இந்த அதிர்ச்சியில் இருந்து இந்தியா மீள்வதற்குள், 3ஆவது விக்கெட்டுக்கு களம் புகுந்த ரோகித் சர்மா, 3 ரன்கள் எடுத்த போது ஷாவிடம் கேச் கொடுத்து வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார்.
10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்துள்ளது. காம்பீர் 19 ரன்களுடனும், யுவராஜ் சிங் 10 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
29 ரன்கள் சேர்ப்பதற்குள் இந்தியா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து மோசமான தொடக்கத்தைப் பெற்றதால் அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|