|
| மலேசிய ஸ்குவாஷ்: பட்டம் வென்றார் ஜோஷ்னா |
| கோலாலம்பூர் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2008 ( 15:58 IST ) | |
மலேசியாவில் நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா பட்டம் வென்றார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் என்.எஸ்.சி. சூப்பர் சேட்டிலைட் ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா சார்பில் நட்சத்திர வீராங்கனையான 22 வயதாகும் ஜோஷ்னா சின்னப்பாவும் கலந்து கொண்டார்.
இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவர், இதில் மலேசியாவின் லோ வீ வெர்னை எதிர்த்து விளையாடினார். இந்த ஆட்டத்தில் ஜோஷ்னா 11- 8, 11- 5, 11- 3 என்ற நேர் செட் கணக்கில் வீ வெர்னை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் டபிள்யூ.ஐ.எஸ்.பி.ஏ. பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஜோஷ்னா பெற்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|