|
| இந்தூரில் 2வது ஒருநாள்: இந்திய வெற்றி தொடருமா? |
| இந்தூர் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2008 ( 15:25 IST ) | |
இந்திய- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி திங்களன்று இந்தூரில் நடைபெறுகிறது. இந்தியாவின் வெற்றி இதிலும் தொடரும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
கெவின் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிராக 7 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
கடந்த 14 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 158 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, வெற்றியுடன் தொடரை துவக்கியது இந்தியா.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நாளை நடைபெறுகிறது.
முந்தையப் போட்டியைப் போலவே இதிலும் இந்தியாவின் அதிரடியை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். பேட்டிங், பவுலிங் இரண்டிலும் இந்தியா வலுவாக உள்ளது.
காயத்தால் அவதிப்பட்டு வந்த யுவராஜ்சிங் 2வது போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என்று தெரிகிறது. இதேபோல் இஷாந்த் சர்மாவும் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, முதல் போட்டியில் சந்தித்த மோசமான தோல்வியை மறக்கும் வகையில் இங்கிலாந்து பதிலடி தரக்கூடும். இதனால் நாளைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று நம்பலாம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|