|
| மே.தீவுகளை வீழ்த்தியது பாக்.! |
| அபுதாபி (ஏஜென்சி), 15 நவம்பர் 2008 ( 13:44 IST ) | |
அபுதாபியில் நடைபெற்ற பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் 24 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.
பாகிஸ்தான்-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி அபுதாபியில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய சல்மான் பட் 7 ரன்களில் அவுட் ஆனார். குர்ரம் மன்ஸூர் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
யூனுஸ்கான் 34, மிஸ்பா 52, ஷோயப் மாலிக் 10, கம்ரன் அக்மல் 45, அஃப்ரீடி 28, தன்வீர் 26 ரன்கள் எடுத்தனர். இறுதியில் அந்த அணி 49 ஓவர்களில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மேற்கிந்திய அணியில் டெய்லர், போவெல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இதன் பின்னர் மேற்கிந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரர்களான கெய்லும், சாட்டர்கூனும் ரன்கள் எடுக்காமலேயே டக் அவுட் ஆகி வெளியேறினர்.
பிறகு களமிறங்கிய சர்வான் 45, மார்ஷல் 1, சந்தர்பால் 107, ஃபிண்ட்லே 12, கார்ல்டன் பாஹ் 3 ரன்கள் எடுத்தனர்.
48.5 ஓவர்களில் மேற்கிந்திய அணி 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அதோடு, 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரையும் 2-0 என்ற கணக்கில் அந்த அணி கைப்பற்றியுள்ளது.
தன்வீர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|