யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
158 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
ராஜ்கோட் (ஏஜென்சி), 14 நவம்பர் 2008   ( 16:13 IST )
ராஜ்கோட் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை 158 ரன்கள் வீத்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

வெற்றி பெற 388 ரன்கள் தேவை என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய பந்து வீச்சை எதிர்கொள்வதற்கு ஆரம்பம் முதல் தடுமாறியது.

பிரையர் 4 ரன்களுக்கும், ஷா ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேற, ஓரளவு சமாளித்து நின்ற பெல் 25 ரன்களுக்கு ஆட்டமிழாந்தார்.

பின்னர் வந்த பிளிண்டாப் (4 ரன்கள்), காலிங்வுட் (19), சமீத் படேல் (28), பிராட் (26), ஹார்மிசன் (0), ஆண்டர்சன் (0) என ஒருவர்பின் ஒருவராக, இந்திய பந்து வீச்சில் சிக்கி விக்கெட்டை இழந்தனர்.

எனினும் பீட்டர்சன் கேப்டனுக்கே உரித்தான பொறுப்புணர்வுடன் போராடி, அரை சதம் அடித்தார். 63 ரன்கள் எடுத்தபோது அவர் ரன் அவுட் ஆனார்.

அவரைப் போலவே கடைசி கட்டத்தில் போபரா தனி ஆளாய் நின்று ரன் குவித்து, இங்கிலாந்து அணி 200 ரன்களைத் தாண்ட காரணமாக இருந்தார்.

இறுதியில் 37.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 229 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. போபரா 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியத் தரப்பில் அபாரமாக பந்து வீசி ஜாகிர்கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முன்னாப் படேல், ஆர்.பி.சிங், யூசுப் பதான், சேவாக்,ஹர்பஜன் ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.

138 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த யுவராஜ்சிங், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி வரும் 17 ஆம் தேதி இந்தூரில் நடைபெறுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் டேவிடென்கோ
அடுத்தடுத்து விக்கெட் இழந்து இங்கி. திணறல்
யுவராஜ் வாணவேடிக்கை: இங்கிலாந்துக்கு இலக்கு 388 ரன்கள்
சென்னை ஓபன் டென்னிசில் மோயா பங்கேற்பு
சேவாக், காம்பீர் அரை சதம்: இந்தியா 128/1
ராஜ்கோட் ஒருநாள்: இந்தியா பேட்டிங்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...