யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
அடுத்தடுத்து விக்கெட் இழந்து இங்கி. திணறல்
ராஜ்கோட் (ஏஜென்சி), 14 நவம்பர் 2008   ( 14:24 IST )
ராஜ்கோட் ஒருநாள் போட்டியில் ஜாகீர்கானின் அபார பந்து வீச்சால் 38 ரன்களைச் சேர்ப்பதற்குள் இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து, தடுமாறி வருகிறது.

வெற்றி பெறுவதற்கு 388 ரன்கள் தேவை என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து. தொடக்க வீரர்களாக பெல்லும் பிரையாரும் ஆட்டத்தைத் தொடங்கினர்.

அணியின் ரன் எண்ணிக்கை 12 ஆக இருந்தபோது 4 ரன்கள் எடுத்த நிலையில் பிரையார் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஷா ரன் எடுக்காமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பி அதிர்ச்சி அளித்தார்.

ஓரளவு சமாளித்து நின்ற பெல், 25 ரன்கள் எடுத்து வெளியேறினார். நெருக்கடியான நிலையில் களம் புகுந்த் பிளிண்டாப், 4 ரன்களுக்கு அவுட் ஆனார்.

11 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழந்து 38 ரன்கள் எடுத்திருந்தது. அபாரமாக பந்து வீசி ஜாகிர்கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முன்னாப் படேலுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.

முன்னதாக பேட் செய்த இந்தியா, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் எடுத்தது. யுவராஜ்சிங் 138 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சேவாக் 85, காம்பீர் 51, ரெய்னா 43, தோனி 38 ரன்கள் எடுத்தனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
யுவராஜ் வாணவேடிக்கை: இங்கிலாந்துக்கு இலக்கு 388 ரன்கள்
சென்னை ஓபன் டென்னிசில் மோயா பங்கேற்பு
சேவாக், காம்பீர் அரை சதம்: இந்தியா 128/1
ராஜ்கோட் ஒருநாள்: இந்தியா பேட்டிங்
மாஸ்டர் டென்னிஸ்: பூபதி ஜோடி தோல்வி
முதல் ஒருநாள்: இந்தியா- இங்கி. நாளை பலப்பரிட்சை
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...