|
| யுவராஜ் வாணவேடிக்கை: இங்கிலாந்துக்கு இலக்கு 388 ரன்கள் |
| ராஜ்கோட் (ஏஜென்சி), 14 நவம்பர் 2008 ( 13:08 IST ) | |
ராஜ்கோட் ஒருநாள் போட்டியில் யுவராஜ் சிங் அதிரடி சதத்தால் இந்தியா இமாலய இலக்கை எட்டியது. இங்கிலாந்தின் வெற்றிக்கு 388 ரன்கள் என்ற இலக்கை அது நிர்ணயித்தது.
இந்திய- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பீட்டர்சன், இந்தியாவை பேட் செய்யக் கேட்டுக் கொண்டார். இதன்படி இந்தியா களமிறங்கியது. காம்பீர் (51),சேவாக் (85) நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்து வெளியேறினர்.
பின்னர் வந்த யுவராஜ், இங்கிலாந்து பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கு விரட்டி ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டினார். சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஒருநாள் போட்டியில் தனது 9வது சதத்தை அவர் நிறைவு செய்தார்.
யுவராஜுக்கு பக்கபலமாக விளையாடிய சுரேஷ் ரெய்னா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரெய்னாவுக்குப் பின் வந்த யூசுப் பதன் ரன் எடுக்காமல் வெளியேறிய போதும், யுவராஜுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தோனி, ரன் வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டார்.
விரைவாக ரன் குவித்த தோனி, 32 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 11 ரன்களுடன், யுவராஜ் சிங் 138 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முதுகு வலியால் அவதிப்பட்ட நிலையிலும் அபாரமாக விளையாடி யுவராஜ் சிங் சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து தரப்பில் ஹார்மிசன், சமீத் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பிளின்டாப் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
வெற்றிபெற 388 ரன்கள் தேவை என்ற இலக்குடன் இங்கிலாந்து தற்போது விளையாடி வருகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|