|
| சென்னை ஓபன் டென்னிசில் மோயா பங்கேற்பு |
| சென்னை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2008 ( 12:07 IST ) | |
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் 7வது முறையாக ஸ்பெயின் வீரர் கார்லஸ் மோயா பங்கேற்கிறார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் வரும் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை ஏ.டி.பி அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இத்தொடரின் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் நிகோலே டேவிடென்கோ, ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா ஆகிய நட்சத்திர வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் ஜோடியான அமெரிக்க சகோதரர்கள் பாப் பிரையன், மைக் பிரையன் ஆகியோரும் தங்கள் பங்கேற்பை உறுதி செய்துள்ளனர்.
இந்திய நட்சத்திரங்கள் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஆகியோர் வெவ்வேறு ஜோடிகளுடன், சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடவுள்ளனர்.
இந்நிலையில், முன்னணி டென்னிஸ் வீரரான ஸ்பெயின் நாட்டின் கார்லஸ் மோயா சென்னை ஓபன் டென்னிஸ் ஒன்ற்றையர் பிரிவில் பங்கேற்கிறார்.
டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் 42வது இடத்தில் உள்ள அவர், 7வது முறையாக சென்னை ஓபனில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|