|
| சேவாக், காம்பீர் அரை சதம்: இந்தியா 128/1 |
| ராஜ்கோட் (ஏஜென்சி), 14 நவம்பர் 2008 ( 10:54 IST ) | |
இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுள்ளது. சேவாக், காம்பீர் அடுத்தடுத்து அரை சதம் அடித்தனர்.
இந்திய- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து, முதலில் பேட் செய்யும்படி இந்தியாவைக் கேட்டுக் கொண்டது.
இதன்படி சேவாக், காம்பீர் ஜோடி ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் இங்கிலாந்து பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விரைவாக ரன் சேர்த்தனர். தங்களின் அபார ஆட்டத்தின் மூலம் சேவாக், காம்பீர் ஜோடி அடுத்தடுத்து அரை சதம் அடித்தனர்.
இந்த ஜோடியை பிரிக்க 6 பந்து வீச்சாளர்களை கேப்டன் பீட்டர்சன் பயன்படுத்திப் பார்த்தார். இதன் பலனாக சமீத் படேல் பந்தில் 51 ரன்களுக்கு காம்பீர் ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்ப்புக்கு 128 ரன்கள் எடுத்திருந்தது. சேவாக் 65 ரன்களுடனும் (57 பந்து), சுரேஷ் ரெய்னா ரன் எண்ணிக்கையை தொடங்காமலும் களத்தில் இருந்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|