யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
முதல் ஒருநாள்: இந்தியா- இங்கி. நாளை பலப்பரிட்சை
ராஜ்கோட் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008   ( 16:20 IST )
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் நாளை நடைபெறுகிறது.

கெவின் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலந்து கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 7 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் தொடர்களில் அந்த அணி விளையாடவுள்ளது.

இதில் முதலாவது ஒருநாள் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்திய தெம்பிலும், ஒருநாள் தொடரில் இலங்கையை தோற்கடித்த புத்துணர்விலும் இந்தியா உள்ளது.

கேப்டன் தோனி தலைமையிலான இளம் இந்திய அணியில் வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், கவுதம் காம்பீர், யூசுப் பதான், சுரேஷ் ரெய்னாவுடன் புதுமுகம் முரளி விஜய் ஆகியோர் பேட்டிங்கில், இங்கிலாந்தை அச்சுறுத்தத் தயாராக உள்ளனர்.

பந்து வீச்சில் ஹர்பஜன்சிங், ஜாகீர்கான், ஆர்.பி சிங் ஆகியோர் எதிரணிக்கு நிச்சயம் நெருக்கடி தருவார்கள் என்று நம்பலாம். முதல் போட்டியில் இஷாந்த் சர்மா இடம் பெறாதது இந்திய அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணியிலும் பீட்டர்சன், பெல், காலிவுட் என அனுபவ பேட்ஸ்மேன்கள், இந்திய வீரர்களுக்கு சிம்ம சொம்பனமாக திகழ்வார்கள் என்று நம்பலாம்.

மொத்தத்தில் நாளை நடைபெறும் முதலாவது ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கால்பந்து தரவரிசை: இந்தியா முன்னேற்றம்
முதல் ஒருநாள் போட்டியில் இஷாந்த் இல்லை
இந்திய அணியின் பாக். பயணம் ரத்து?
சென்னை ஓபனில் பிரையன் சகோதரர்கள் பங்கேற்பு
தர வரிசையில் சச்சின், ஹர்பஜன் முன்னேற்றம்
மாஸ்டர் டென்னிஸ்: பெடரர், ரோடிக் தோல்வி
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...