|
| கால்பந்து தரவரிசை: இந்தியா முன்னேற்றம் |
| ஜூரிச் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008 ( 12:49 IST ) | |
சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 4 இடங்கள் முன்னேறி 144வது இடத்தில் உள்ளது. ஸ்பெயின் அணி தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) நேற்று வெளியிட்ட கால்பந்து தரவரிசைப் பட்டியலின்படி ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணி, 5வது மாதமாக தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
ஜெர்மன் அணி ஒரு இடம் முன்னேறி 2 ஆவது இடத்துக்கும், அந்த இடத்தில் இருந்த இத்தாலி அணி 3வது இடத்திலும் உள்ளன.
ஹாலந்து அணி 5 ஆவது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. 4வது இடத்தில் இருந்த பிரேசில் 5 வது இடத்துக்கு சரிந்தது.
தரவரிசைப் பட்டியலில் இந்தியா 4 இடங்கள் முன்னேறி 144வது இடத்தைப் பெற்றுள்ளது. ஆசிய அளவில் அது 20வது இடத்தில் உள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|