யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
இந்திய அணியின் பாக். பயணம் ரத்து?
புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 12 நவம்பர் 2008   ( 13:15 IST )
வரும் ஜனவரி மாதத்தில் பாகிஸ்தானுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுப் பயணம் ரத்தாகலாம் என்று தெரிகிறது.

வரும் ஜனவரி மாத முதலாவது வாரத்தில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள், ஒரு 20 - 20 கிரிக்கெட் போட்டிகளில் அது விளையாடவுள்ளது.

ஆனால், பெஷாவரில் நேற்று நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தால் இந்த பயணம் திட்டமிட்டபடி நடக்குமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.

பெஷாவர் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானம் அருகே நேற்று தீவிரவாதிகளின் தற்கொலைப்படை நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் பலியாகினர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த மைதானத்தில் இந்திய அணி விளையாடத் திட்டமிடாத நிலையிலும், பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாகிஸ்தானுக்குச் செல்வது ரத்து செய்யப்படலாம் என்று தெரிகிறது.

இந்திய வீரர்களின் பயணம் ரத்து செய்யப்படலாம் என்ற தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமோ அல்லது பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகமோ இதுவரை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னை ஓபனில் பிரையன் சகோதரர்கள் பங்கேற்பு
தர வரிசையில் சச்சின், ஹர்பஜன் முன்னேற்றம்
மாஸ்டர் டென்னிஸ்: பெடரர், ரோடிக் தோல்வி
மாஸ்டர்ஸ் டென்னிஸ்: பயஸ் ஜோடி தோல்வி
தேசிய நீச்சல் போட்டி: தமிழகத்துக்கு 3 தங்கம்
பந்து வீச்சில் தாமதம்: பாண்டிங்கிற்கு அபராதம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...