யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
சென்னை ஓபனில் பிரையன் சகோதரர்கள் பங்கேற்பு
சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 12 நவம்பர் 2008   ( 11:24 IST )
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முதல்நிலை ஜோடியான பிரையன் சகோதரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில், வரும் ஜனவரி 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை ஏ.டி.பி அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன.

உலகின் முன்னணி வீரர்கள் பலர் இதில் கலந்து கொண்டு விளையாடவுள்ளனர். ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் நிகோலே டேவிடென்கோ, ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரின்கா ஆகிய நட்சத்திர வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்திய நட்சத்திரங்கள் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஆகியோர் வெவ்வேறு ஜோடிகளுடன், சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் விளையாடவுள்ளனர்.

இந்நிலையில் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் ஜோடியான அமெரிக்க சகோதரர்கள் பாப் பிரையன், மைக் பிரையன் ஆகியோர், சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர்.

முதல்முறையாக இத்தொடரில் பங்கேற்கும் பிரையன் சகோதரர்கள், இதுவரை 6 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் உட்பட மொத்தம் 49 பட்டங்களை கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தர வரிசையில் சச்சின், ஹர்பஜன் முன்னேற்றம்
மாஸ்டர் டென்னிஸ்: பெடரர், ரோடிக் தோல்வி
மாஸ்டர்ஸ் டென்னிஸ்: பயஸ் ஜோடி தோல்வி
தேசிய நீச்சல் போட்டி: தமிழகத்துக்கு 3 தங்கம்
பந்து வீச்சில் தாமதம்: பாண்டிங்கிற்கு அபராதம்
டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு 2வது இடம்
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...