யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
இந்தியா அபார வெற்றி: 2- 0 கணக்கில் தொடரை வென்றது
நாக்பூர் (ஏஜென்சி), 10 நவம்பர் 2008   ( 14:32 IST )
நாக்பூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்டில் இந்தியா 172 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2- 0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பார்டர் - கவாஸ்கர் தொடருக்கான 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.

பெங்களூரில் நடந்த முதல் டெஸ்ட் டிராவானது. மொகாலியில் நடந்த 2வது டெஸ்டில் 320 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. டெல்லியில் நடந்த 3வது கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, நாக்பூரில் நடந்தது. இதில் டாஸ் வென்று இந்தியா தனது முதல் இன்னிங்சில் 441 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 295 ரன்களையும் எடுத்தது.

முதல் இன்னிங்சில் 355 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆஸ்திரேலிய அணி, வெற்றிக்கு 382 ரன்கள் தேவை என்ற இலக்குடனும், தொடரை சமன் செய்ய வேண்டிய நெருக்கடியுடனும் களமிறங்கியது.

தோனியின் சிறப்பான வியூகமும், பந்து வீச்சாளர்களின் நேர்த்தியான பந்து வீச்சாலும், ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் சேர்க்க கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.

கேடிச் (16 ரன்கள்), பாண்டிங் (8), கிளார்க் (22),ஹசி (19), ஹாடின் (4), கிரெஜா (4), பிரட்லீ (0), என ஆஸ்திரேலிய வீரர்கள் ஒருவர்பின் ஒருவராக ஆட்டமிழந்து, அணியின் தோல்வியை உறுதி செய்தனர்.

ஒரு கட்டத்தில் ஹைடன் நிதானமாக ஆடி ரன் குவித்து வந்ததை பார்த்தபோது ஆட்டம் டிராவில் முடிவடையுமோ என்ற சந்தேகம் எழுந்தது. சதத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹைடனுக்கு ஹர்பஜன் அணை போட்டார். 77 ரன்களுக்கு ஹர்பஜன் பந்தில் அவர் ஆட்டமிழந்தார்.

இறுதியில் 50.2 ஓவர்களில் 209 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆட்டமிழந்தது, 172 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்தது. இந்தியத் தரப்பில் ஹர்பஜன், மிஸ்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டையும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக கிரெஜ்ஜாவும், தொடர் நாயகனாக இஷாந்த் சர்மாவும் அறிவிக்கப்பட்டனர்.

இந்த வெற்றியின் மூலம் பார்டர் - கவாஸ்கர் தொடரை 2- 0 என்ற கணக்கில் தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. அசைக்க முடியாத அணியாக பீடு நடைபோட்டு வந்த ஆஸ்திரேலியாவுக்கு, இந்தியா சரியான பதிலடி கொடுத்துள்ளது.

கும்ளே, கங்குலி ஆகியோரின் உணர்ச்சிபூர்வ ஓய்வு அறிவிப்புடன் இத்தொடரை மறக்கமுடியாத ஒன்றாக இந்தியா தனதாக்கிக் கொண்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தோல்வியின் விளிம்பில் ஆஸ்திரேலியா
விடைபெற்றார் சவுரவ் கங்குலி
மாஸ்டர்ஸ் டென்னிஸ்: பூபதி இணை வெற்றி
தோல்வியைத் தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்
2வது இன்னிங்ஸ்: ஆஸி.13: இந்தியா 295!
2வது இன்னிங்சில் இந்தியா 295!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...