யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் விளையாட்டு
தோல்வியின் விளிம்பில் ஆஸ்திரேலியா
நாக்பூர் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 10 நவம்பர் 2008   ( 13:18 IST )
நாக்பூர் கிரிக்கெட் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. 33 ஓவர்களில் அந்த அணி 161 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா- ஆஸ்திரேலியாவுக்கு இடையே நாக்பூரில் 4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. 4 ஆம் நாளான நேற்று, ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்திருந்தது.

வெற்றிக்கு இன்னும் 369 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்று காலை அது தனது ஆட்டத்தைத் தொடர்ந்தது. இந்திய பந்து வீச்சை எதிர்கொள்ள திணறிய ஆஸ்திரேலிய வீரர்கள், சீரான இடைவெளியில் தங்கள் விக்கெட்டை இழந்தனர்.

கேடிச் 16 ரன்களுக்கும், பாண்டிங் 8 ரன்களுக்கும், கிளார்க் 22 ரன்களுக்கும், ஹசி 19 ரன்களுக்கும், ஹாடின் 4 ரன்களுக்கும் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் தொடக்க வீரர் ஹைடன் நிதானமாக ஆடி ரன் குவித்து வந்தார்.

அரை சதம் அடித்து இந்திய அணிக்கு கிலி ஏற்படுத்திய அவர், 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

33 ஓவர்களில் அந்த அணி 161 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. வாட்சன் 3 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்தியத் தரப்பில் இஷாந்த், மிஷ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

வெற்றிக்கு 382 ரன்கள் தேவை என்ற கடின இலக்குடன் விளையாடி வரும் ஆஸ்திரேலியா, தற்போது போட்டியை டிரா செய்தாலே போதும் என்ற முனைப்புடன் உள்ளது. ஆனால் முன் வரிசை ஆட்டக்காரர்களின் விக்கெட்டை அது இழந்துள்ளதால், எஞ்சிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 441 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 355 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 295 ரன்கள் எடுத்தது நினைவுகூறத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இன்றுடன் விடைபெறுகிறார் சவுரவ் கங்குலி
மாஸ்டர்ஸ் டென்னிஸ்: பூபதி இணை வெற்றி
தோல்வியைத் தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்
2வது இன்னிங்ஸ்: ஆஸி.13: இந்தியா 295!
2வது இன்னிங்சில் இந்தியா 295!
நாக்பூர் டெஸ்ட்: இந்தியா 289/9
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஏகன்
தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'....
கத்திக்கப்பல்
சக்கரகட்டி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...